ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு: இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?… Aadhaar Free Update Time Extend…
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில் ஆதார் அட்டை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை இருந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி மக்கள் தங்களுடைய ஆதார் ஆவணங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்களைப் புதுப்பிக்கலாம்:
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை யுஐடிஏஐ இணையதளத்தில் ஒருவர் தங்கள் பெயர், புகைப்படம், மற்றும் பிற மாற்றங்களைப் புதுப்பிக்கலாம். நீங்கள் ஆதார் சேவை மையங்கள், அல்லது போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றிற்குச் சென்றால் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏதற்காக அப்டேட் செய்ய வேண்டும்?
ஆதார் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளை தவிர்ப்பது. மேலும், திருமணம் காரணமாக ஒரு நபரின் பெயர் மற்றும் முகவரியில் மாற்றங்கள் ஏற்படலாம். சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஒரு தன்னுடைய மொபைல் எண், இமெயில், முகவரி போன்றவற்றை மாற்றி இருக்கலாம். மேலும், குழந்தைகளின் ஆதார் விபரங்களை அப்டேட் செய்வதற்கு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இதன்படியே, ஒரு குழந்தை 15 வயதை தாண்டியவுடன் அவரது அனைத்து பயோமெட்ரிக்களும் அப்டேட் செய்யப்பட வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் புதுபிக்க:
1. முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஓபன் செய்யவேண்டும்.பின்னர் உங்கள் ஆதார் எண்னை கொடுக்கவேண்டும்.
2. ‘முகவரியைப் புதுப்பிக்கத் தொடரவும்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. பின்னர் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை(OTP) உள்ளீடு செய்து நுழையவும்.
4. இதன் பின்னர் ஆவணம் புதுப்பிப்பு (Document Update) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்லிங்கில் கிளிக் செய்யவும்.
6. கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவேற்றவும்.
7. பின்னர் சப்மிட் (submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
8: 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களது புதிய கோரிக்கை ( update request) ஏற்கப்படும்.