குழந்தைகளுக்கான சிறந்த காப்பீடு திட்டம்:பால் ஜீவன் பீமா யோஜனா; முழு விவரங்கள்..! Bal Jeevan Bima; Postal Life insurance Plan for Children
அஞ்சல் அலுவலகத்தில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தான் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம். இத்திட்டத்தின் பலன்கள், யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
நம் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு அவர்களுடைய சிறு வயது முதலே நாம் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் . அவர்களின் கல்வி செலவு மற்றும் திருமணச் செலவுகளுக்கு இந்த முதலீடு பயனுள்ளதாக அமையும். சேமிப்புத் திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானதாக அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் உள்ளன. பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை. அவ்வகையில், குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒன்றையும் அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம்:
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்பது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இதன் மூலம் குறைந்தபட்ச தொகையாக ரூ. 6 ரூபாய் முதல் தினமும் நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து போகும் பட்சத்தில் ரூ.1 லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.
வயது வரம்பு:
குழந்தையின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் என யார் வேண்டுமென்றாலும் அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குழந்தையின் 18 வயது வரை தான் நீங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
- குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் யார் வேண்டுமானாலும் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Rural Postal Life Insurance), போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Postal Life Insurance) என்று இரு தனித்தனி திட்டங்களில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
- போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம்.
- உங்கள் குழந்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தால், 20 வயதிற்கு மேல் இருந்து, நீங்கள் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, வருடத்திற்கு ரூ. 48 ரூபாய் போனஸாக வழங்கப்படும்.
- நீங்கள் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருந்தால், உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ. 1,000 ரூபாய்க்கு, ரூ. 52 ரூபாய் போனஸ் வழங்கப்படும். இந்தத் தொகையை நீங்கள், முதிர்வு காலத்தின் போது மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.
whats app - Click to more info
Telegram - Click to more info