இந்திய கடலோர காவல்படை அறிவிப்பு;+2 தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!Indian cost Guard Notification 2024..

 

இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு:-

இந்திய கடலோர காவல்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Navik, Yantrik அல்லது Assistant Commandant ஆக சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்வுகளில் ஒன்றாகும். இந்திய கடலோர காவல்படை ஒவ்வொரு ஆண்டும் இந்த பதவிகளுக்கு பல்வேறு தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்துகிறது. ஆட்சேர்ப்பு தகுதியின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது.

 

இந்த தேர்வுகளுக்கான இந்திய கடலோர காவல்படை அறிவிப்புகள் இந்திய கடலோர காவல்படையின் (ICG) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, மீதமுள்ள செயல்முறைகளும் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படுகின்றன. தேர்வு செயல்முறை பல கட்டங்களை உள்ளடக்கியது – எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு (PFT) மற்றும் மருத்துவப் பரிசோதனை.

காலிப்பணியிடங்கள் – 320

  • நேவிக் (General Duty) – 260,
  • யான்ட்ரிக் (Mechanical) – 33,
  • யான்ட்ரிக் (Electrical) – 18,
  • யான்ட்ரிக் (Electronics) – 9

கல்வி தகுதி :-

நேவிக் பணிக்கு – 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யான்ட்ரிக் பணிக்கு – 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்/மெக்கானிக்கல்/எலெக்ட்ரானிக்கஸ்/தகவல் தொடர்பியல் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (முழு தகவலுக்கு அறிவிப்பை படித்து பார்க்கவும்)

தேர்வு:-

கணினி வழி எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதி மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். இதில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:-

250 ரூபாய் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:-

https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.07.2024ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்படிவம் – Click here

whats app - Click to more info
Telegram - Click to more info

Leave a Comment