TNPSC குரூப் 2 தேர்வு – 2327 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, சம்பள விவரங்கள்..! TNPSC Notification Group 2 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2327 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- குரூப் 2 பிரிவில் 507 இடங்களும்,
- குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளெர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Level 8,10,11,16,18 மற்றும் 19 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18,20,22 மற்றும் 26 என்றும் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்:
- பொது தமிழ்/பொது ஆங்கிலம்
- பொது ஆய்வுகள்
- திறன் மற்றும் மன திறன் சோதனை
மொத்த கேள்விகள்: 200
மதிப்பெண் : 300
ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் இருக்கும், மேலும் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மெயின்ஸ்:
தேர்வு முறை: ஆஃப்லைன்
நேரம்:
- தாள்-I: 1 மணி 30 நிமிடங்கள்
- தாள்-II: 3 மணி நேரம்
பிரிவுகள்:
- தாள்-I (கட்டாய தமிழ் தகுதி தாள் ) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு துல்லியமான எழுத்து புரிதல் ஹிண்ட்ஸ் டெவலப்மெண்ட் கட்டுரை எழுதுதல் (பொது) கடிதம் எழுதுதல் (அதிகாரப்பூர்வ) தமிழ் மொழி அறிவு
- தாள்-II (பட்டம் தரநிலை) – பொது ஆய்வுகள் (விளக்க வகை)
மொத்த மதிப்பெண்கள்:
- தாள்-I: 100 (தகுதி)
- தாள்-II: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ் தாள்-II
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
whats app - Click to more info
Telegram - Click to more info