கல்லூரி மாணவர்களுக்கு புதிய திட்டம்: திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள் திட்டம்-முழு விவரங்கள்..! Tamilnadu skills-Finishing schools Plan

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறன்களை வளர்த்து மாநிலத்தை திறன் மையமாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. 2013 முதல், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் மாநகராட்சியாகச் செயல்படுகிறது. திறன் மேம்பாட்டுக்கான மாநில நோடல் ஏஜென்சியாக TNSDC அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் தமிழ்நாடு – நிலைப் பள்ளிகள் திட்டம் :
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கீழ் ரூ.100 கோடி செலவில் திறன் தமிழ்நாடு – நிறைப் பள்ளிகள் (TN Skills – Finishing Schools)திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு பட்டப்படிப்பு, தனித்திறன் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு உதவப்படும். சிறந்த தொழில் நிறுவனங்கள் மூலம் முழு மற்றும் பகுதி அளவு மானியத்துடன் திறன் ஓலைகள் (Skill Vouchers), பணியிடப் பயிற்சி (Intership) திறன் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், நிறைப் பள்ளிகள் (TN Skills – Finishing Schools)திட்டம் அறிவிக்கப்பட்டது.

whats app - Click to more info
Telegram - Click to more info

Leave a Comment